பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
அறுவடைக்குப்பின் தோன்றும் கிழங்கு அழுகல் : ஸ்க்லரோஷியம் சோல்சி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • ஆரம்ப அறிகுறி வாடுதல் ஆகும்.
  • கிழங்கின் மீது மஞ்சளாக இலை தோன்றுகிறது.
  • பாதிக்கப்பட்ட கிழங்குகளில் க்ரோஸியா காணப்படும். கிழங்குகள் அழுகி விடும்.
  • கிழங்குகளில் பால் வெள்ளை நிறத்தில் சல்லடைகள் காணப்படும்.
 
  முதல்கட்ட வெள்ளை பூஞ்சை வளர்ச்சி பூஞ்சை மைசிலியம் வேர்களில் மைசிலியம பாதிக்கப்பட்ட கிழங்கு
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • மண்ணில் உள்ள பூசணம் மற்றும் ஸ்கலரோடியா பயிர்களின் நோய் பரவ காரணமாகிறது.
  • பாதிக்கப்பட்ட மண்ணில் இருந்து ஓடும் நீர் மற்றும் பண்ணைக்கருவிகள் மூலம் இந்நோய் பரவுகிறது.
  • விதை கிழங்குகள் மூலமும் பூஞ்சை மற்றும் செலரோஷியா பரவுகிறது.
  • உலர்ந்த மண்ணில் இருக்கும் செரிசியா இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கிறது.

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • உகந்த வெப்பநிலை 30 - 35°செல்சியஸ்
  • மாறி வரும் ஈர மற்றும் உலர் மண் வளத்தின் நிலை
  • மாறுபட்ட உலர் மற்றும் ஈரப்பதமான மண் நிலை
கட்டுப்படுத்தும் முறை:
  • பாதரச சேர்மங்கள் மூலம் விதைகளை நேர்த்தி செய்வதன் மூலம்கிழங்கு அழுகலை அறுவடைக்குப்பின் தவிர்க்கலாம்.
  • குப்ரி சிந்தூரில் நோயின் அளவு குறைவாகக் காணப்படுகிறது.
  • இந்திய வணிகப்பயிரிடுவதில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. குப்ரி பாகர், குப்ரி சமத்கார், குப்ரி ஜோதி, குப்ரி முத்து மற்றும் குப்ரி ஸ்வர்னா
  • சோளம் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை வளர்ப்பதன் மூலம் நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
Source of Images:
Mejda Daami-Remadi, Hayfa Jabnoun-Khiareddine, Fakher Ayed, Khaled Hiba, and Mohamed El Mahjoub.2007.First Report of Sclerotium rolfsii Causing Atypical Soft Rot on Potato Tubers in Tunisia.Tunisian Journal of Plant Protection, 2 (1),pp-59-62.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015